சீனா அணு விஞ்ஞானி மர்ம மரணம்!!

ஆசிரியர் - Editor II
சீனா அணு விஞ்ஞானி மர்ம மரணம்!!

சீனா நாட்டின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளமை அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அந்நாட்டில் உள்ள ஹார்பின் பொறியியல் பல்கலை கழகத்தின் துணை தலைவர் மற்றும் அந்நாட்டின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவராக பேராசிரியர் ஜாங் ஜீஜியான் திகழ்ந்து வந்தார். 

இந்நிலையில், ஹார்பின் பல்கலை கழகம் சார்பில் பேராசிரியர் ஜாங் ஜீஜியான் கடந்த 17 ஆம் திகதி காலை 9.34 மணியளவில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் ஜாங்கின் மரணம் பற்றி வேறு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. பல்கலை கழகத்தின் வலைதள பக்கத்தில் நேற்று வரை ஜாங்கின் பெயர் தலைமைத்துவ பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

ஜாங் அந்த பல்கலை கழகத்தின் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியராகவும் மற்றும் அந்நாட்டின் அணு கழகத்தின் துணை தலைவர் ஆகவும் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் அவருடைய திடீர் மரணம் மற்றும் மரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளிவராத நிலையில் மரணம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு