SuperTopAds

ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்கள்!! -தனித்தனி வாக்கரிமை கோரி விண்ணப்பம்-

ஆசிரியர் - Editor II
ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்கள்!! -தனித்தனி வாக்கரிமை கோரி விண்ணப்பம்-

இந்தியாவின் பஞ்சாப்பில் ஒட்டிய உடலுடன் கூடிய இரட்டை சகோதரர்கள் தனித்தனியாக வாக்களிப்பதற்கான உரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டு பிறந்த அவர்களுக்கு தலை, மார்பு, இதயம், நுரையீரல், முதுகெலும்பு தனித்தனியாகவும், சிறுநீரகம், கல்லீரல், சிறுநீர்ப்பை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் ஒரு நபருக்கு உள்ளது போன்று அமைந்திருந்தது. 

அவர்கள் மிக நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று மருத்துவர்கள் கூறினர். இதனால் அவர்களை வளர்ப்பதற்கு பெற்றோர் மறுத்த நிலையில் பிபி இந்தர்ஜித் கவுர் என்பவர், தான் வளர்ப்பதாக தெரிவித்து சோஹ்னா - மோகனா என்ற பெயரையும் சூட்டினார். 

இந்நிலையில் தற்போது வாக்குரிமை பெறும் வயதை அடைந்த அவர்கள் பட்டப்படிப்பை முடித்துள்ள நிலையில் தற்போது தனித்தனி வாக்குரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.