SuperTopAds

ஆற்றின் தண்ணீரில் கொரோனா வைரஸ்!! -பெரும் ஆபத்து என எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
ஆற்றின் தண்ணீரில் கொரோனா வைரஸ்!! -பெரும் ஆபத்து என எச்சரிக்கை-

இந்தியாவின் குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றின் தண்ணீரில் கொரோனா வைரஸ் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக குஜராத்தின் சபர்மதி ஆறு, சந்தோலா ஏரியிலிருந்து தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் கொரோனா வைரஸ் கலந்துள்ளதா என்பது தொடர்பான ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

ஐ.ஐ.டி காந்திநகர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் இதனை மேற்கொண்டனர்.

அதில், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் தடயங்களைக் கண்டறிந்துள்ளனர். இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.