யாழ்.நயினாதீவில் கரை ஒதுங்கிய மருத்துவ கழிவுகள் குறித்து விசேட கவனம்! பகுப்பாய்வுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பபட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நயினாதீவில் கரை ஒதுங்கிய மருத்துவ கழிவுகள் குறித்து விசேட கவனம்! பகுப்பாய்வுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பபட்டது..

யாழ்.நயினாதீவு கடற்கரையில் ஒதுங்கியிருக்கும் மருத்துவ கழிவுகளில் உள்ள மருந்துகள் இலங்கையில் பயன்படுத்தப்படுவதில்லை. என வேலணை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். 

கடந்த செவ்வாய்க்கிழமை நயினாதீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த 

டற்பரப்பில் ஒரு சில மருத்துவ உபகரணங்கள் கரையொதுங்கியது. குறித்த மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் எந்த நாட்டினுடையது என உறுதியாக கூற முடியாவிட்டாலும் அவை இலங்கையில் பயன்படுத்தும் உபகரணங்கள் அல்ல.

ஆகவே குறித்த உபகரணங்களை பகுப்பாய்வு செய்யும் பொருட்டு கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு