SuperTopAds

ஆண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் ஆண்மை குறையும்!! -அதிர்ச்சி தகவல் வெளியானது-

ஆசிரியர் - Editor II
ஆண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் ஆண்மை குறையும்!! -அதிர்ச்சி தகவல் வெளியானது-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆண்களின் விந்தணு செயல்பாடு சேதமாகும் என்றும், விந்தணுக்களின் எண்ணிக்கை அளவு, இயக்கம் ஆகியவற்றில் 50 வீதமளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது வெளிவந்துள்ள சில தரவுகளின் அடிப்படையில் கொரோனா ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆண்களின் விந்தணு செயல்பாடு சேதமாகும் என்றும், விந்தணுக்களின் எண்ணிக்கை அளவு, இயக்கம் ஆகியவற்றில் 50 வீதமளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

விந்தணுக்களின் உற்பத்தி அல்லது பாலியல் ஹார்மோன்களின் உருவாக்கத்தை பாதிக்கும். இது வெறும் கொரோனா தாக்கத்தை பொறுத்தது என்றும் கூறிவிட முடியாது. கொரோனா பாதிப்பால் ஏற்படும் மனச்சோர்வு, மன அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

நோய் தொற்றின் தீவிரம் விந்தணுக்களின் தாக்கம் மிதமாகவோ அல்லது தீவிரமாகவோ இருந்தால் தற்காலிக ஆண்மைக்குறைவுக்கு வழி வகுக்கும். நிரந்தரமான சேதம் ஏற்படுமா? என்பது பற்றி தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.