பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்த பொலிஸ்: தலைமை ஆசிரியர் உட்பட 5 கைது!! -அரசுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றச்சாட்டு-
சீனா மற்றும் ஹொங்கொங்கைப் பற்றி விமர்சன ரீதியாக புகழ்பெற்ற ஆப்பிள் டெய்லி ஊடக நிறுவனத்தில் வியாழக்கிழமை காலை பொலிஸார் நடத்திய சோதனையில் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் உட்பட 5 சிரேஸ்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொங்கொங்கில் ஜனநாயக சார்பு இயக்கத்தை வெளிப்படையாக ஆதரித்து வருகின்ற குறித்த ஊடக நிறுவனம் மிக நீண்ட காலமாக சீனா அரசின் பக்கத்தில் ஒரு எதிரியாக இருந்து வருகின்றது.
ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்புத் துறை வெளிநாட்டு அமைப்புடன் ஒத்துழைத்ததாக சந்தேகத்தின் பேரில் ஊடக அமைப்பின் ஐந்து இயக்குநர்களை கைது செய்ததாக அரசாங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
கைது செய்யப்பட்டவர்களில் 47 முதல் 63 வயதுடைய 4 ஆண்களும் ஒரு பெண்ணுமே அடங்குவதாக அந்த அறிக்கையில் மேலும் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.