யாழ்.நீர்வேலியில் கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி..! அவருடைய வீட்டு சூழல் முடக்கப்படலாம்..

யாழ்.நீர்வேலியில் கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை சுகாதார பிரிவு வெளியிட்டிருக்கின்றது. நீர்வேலியில் கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்தபோது நேற்றய தினம் நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36)
என்பவர் உயிரிழந்திருந்தார். இதனையடுத்து மரணத்தின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்த நபருடைய வீட்டு சூழலில் இருந்து எவரும் வெளியே செல்லகூடாது எனவும் வெளியிலிருந்து ஒருவரும் உள்ளே செல்ல கூடாதெனவும்
கிராமசேவகர் ஊடாக அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. இதேவேளை அவருடைய வீட்டுச் சூழல் முடக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.