யாழ்.நகரில் வடிகால் புனரமைப்பு பணிகளின்போது வெடிக்காத நிலையில் ஷெல் மீட்பு..!

யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள வடிகால் புனரமைப்பு செய்யப்பட்டுவரும் நிலையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பணிகளின்போது வெடிக்காத நிலையில் ஷெல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார்.
மிக நீண்டகாலம் எந்தவொரு புனரமைப்பு பணிகளும் இடம்பெறாமலிருந்த குறித்த வடிகாலில் தற்போது மாநகரசபையினால் புனரமைப்பு பணிகள் இடம்பெறும் நிலையில் தொடர்ச்சியாக ஆபத்தான பாம்புகளும், இரும்பு கம்பிகளும் மீட்கப்பட்டுவந்த நிலையில்,
இன்று காலை வெடிக்காத ஷெல் ஒன்று மீட்கப்பட்டிருக்கின்றது.