முககவசம், சமூக இடைவெளி இன்றி பட்டமளிப்பு விழா!! -உகானில் ஒன்று கூடிய 11,000 மாணவர்கள்-

ஆசிரியர் - Editor II
முககவசம், சமூக இடைவெளி இன்றி பட்டமளிப்பு விழா!! -உகானில் ஒன்று கூடிய 11,000 மாணவர்கள்-

சீனாவின் உகான் நகரில் 18 மாதங்களுக்குப் பின் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

அந்நாட்டின் ஹ_பே மாகாணத்தின் தலைநகரான உகானில் தான் உலகின் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் அங்கு முககவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதை  காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

மத்திய சீனாவின் நார்மல் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு