போர்களமாக மாறிய பாகிஸ்தான் பாராளுமன்றம்!! -பட்ஜெட் நகல்கள் கிழிப்பு: மோதலில் பெண் உறுப்பினர் காயம்-

ஆசிரியர் - Editor II
போர்களமாக மாறிய பாகிஸ்தான் பாராளுமன்றம்!! -பட்ஜெட் நகல்கள் கிழிப்பு: மோதலில் பெண் உறுப்பினர் காயம்-

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் வரவுசெலவு திட்டத்தின் மீதான விவாதத்தின் போது மோதலில் ஈடுபட்ட 7 உறுப்பினர்கள் சபைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் 2021-22 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை அந்த நாட்டின் நிதியமைச்சர் சவுகத் தரின் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கும் ஷெபாஸ் ஷெரீப் பட்ஜெட்டில் விவாதத்திற்கான உரையை ஆரம்பித்தார். 

இதன் போது அந்நாட்டின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியான முஸ்லிம் லீக் (நவாஸ்) உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் இருந்து எழுந்து வந்து நேருக்கு நேர் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

ஆவேசம் அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரவு செலவு திட்ட உரையின் நகல்களை கிழித்து எறிந்தனர். இதனால் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் உறுப்பினர் மாலேகா பொகாரி கண்ணில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒட்டு மொத்தத்தில் பாராளுமன்றமே யுத்த களம் போல் காட்சி அளித்தது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு