யாழ்.சாவற்கட்டு கிராமம் முடக்கப்பட்டது! அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக மாவட்ட செயலர் அறிவிப்பு..

யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாவற்கட்டு கிராமத்தின் ஜே.131 கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தகவலை யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார், சாவக்காடு கிராமத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின்போது
அதிகளவானோர் தொற்றுக்குள்ளானதன் காரணமாக குறித்த பகுதியினை முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவினர் சிபார்சு செய்து
யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இன்று மாலை முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.