யாழ்.வட்டுக்கோட்டை, சித்தங்கேணி பகுதிகளில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை! பயணத்தடையை மீறியோருக்கு எச்சரிக்கை..

யாழ்.வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதிகளில் இன்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
நாடுபூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வட்டுக்கோட்டையில் பயணத் தடையினை மீறி
வீதியில் பயணிப்போர் கட்டுப்படுத்தும் முகமாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலக தலைமையிலான
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய அணியினரால் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை, சித்தங்கேணி பகுதிகளில் பொலிசாரினால் குறித்த கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் தேவையற்று நடமாடியவர்கள் கடும் எச்சரிக்கை செய்யப்பட்டு வீட்டுக்கு திருப்பியனுப்பபட்டனர்.