வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான இராணுவ வாகனம்! யாழ்.மீசாலையில் இன்று அதிகாலை சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான இராணுவ வாகனம்! யாழ்.மீசாலையில் இன்று அதிகாலை சம்பவம்..

யாழ்.மீசாலை பகுதியில் இராணுவத்தினரின் சிறியராக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த சம்பவம் இன்று அதிகாலை மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவத்தின் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் 

மீசாலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில் 

வாகனம் முன்பக்கம் சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இராணுவ போக்குவரத்து பொலிஸார் மற்றும் கொடிகாமம் பொலிஸார்

விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு