யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று! பிரதேசசபை முடக்கம், தவிசாளர் உட்பட 24 பேர் தனிமைப்படுத்தலில்..
யாழ்.வலிமேற்கு பிரதேசசபை தலமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து
அலுவகம் மூடப்பட்டுள்ளது. தவிசாளர் மற்றும் செயலாளர், உத்தியோகத்தர்கள் என 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இங்கு பணியாற்றும் ஒரு உத்தியோகத்தருக்கு கடந்த 2 ஆம் திகதி தொற்று உறுதிசெய்யப்பட்டமையை அடுத்து கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல்
பணிகள் யாவும் நிறுத்தப்பட்டு அலுவலகம் மூடப்பட்டு 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் ஒருவருக்கு நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்
தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனைய தவிசாளர், செயலாளர் உட்பட 23 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.
இதேவேளை, அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் விநியோகம் மற்றும் கழிவகற்றல் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்று வருகின்றன.