யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! நேற்றும் இன்றும் 4 கொரோனா மரணங்கள் பதிவு..

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் சத்திரகிச்சை ஒன்றுக்காக அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை முடிந்து நலமடைந்த நிலையில்
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.03 நாட்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு
கொரோனா மருத்துவ விடுதியில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.இந்நிலையில் இன்று நண்பகல் அவர் உயிரிழந்ததாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும்
சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அவரது உடலம் தகனம் செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சுப்பிரமணியம் வீதி, அரியாலையைச் சேர்ந்த சரவணமுத்து முத்துச்சாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.