SuperTopAds

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட கிராமசேவகர் உட்பட 16 பேர் சுய தனிமைப்படுத்தல்

ஆசிரியர் - Editor III
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட கிராமசேவகர் உட்பட 16 பேர் சுய தனிமைப்படுத்தல்

 கொவிட்- 19 கட்டுப்பாடுகளை மீறி அனுமதியின்றி  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்வில்   கலந்து கொண்ட கிராமசேவகர் உட்பட 16 பேர்  சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் நேற்றையதினம் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பாண்டிருப்பு  பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு தொடர்பாக  முகநூலில் புகைப்படமாக வெளிவந்துள்ளதை தொடர்ந்து அதை ஆதாரமாக கொண்டு  பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிறந்த நாள்  நிகழ்வை நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்  மற்றும் கிராமசேவையாளர் உட்பட 16 பேர் அவரவர் வீடுகளில் சுய  தனிமைப்படுத்த பட்டனர்.

இதேவேளை குறித்த  நிகழ்வில் கலந்து கொண்டு  தப்பி சென்றதாக கூறப்படும்   ஏனையோரையும்    புகைப்படம் மற்றும் காணொளிகளை அடிப்படையாக கொண்டு   தனிமைப்படுத்தி வைப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.