யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் ஆபத்தாக மாறியதற்கு மக்களே காரணம்! ஆலய திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் இப்போதும் நடக்கிறது..

யாழ்.மாவட்ட மக்களின் செயற்பாடுகளினாலேயே மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதாக மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா கூறியிருக்கின்றார்.
நாவற்குழியில் கொரோனா சிகிச்சை நிலையத்தை திறந்துவைத்து ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
யாழ்.மாவட்டத்தில் கடந்த காலத்தை விட தற்பொழுது தொற்றுஅதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது மாவட்டத்திலே சில ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் கட்டுப்பாடுகளை மீறி ஆலய உட்சவங்கள் நடத்தப்பட்டமையாலேயே
தொற்றுநிலைமை அதிகரித்தது தற்போதும் சில இடங்களில் திருமண நிகழ்வுகள் வீடுகளில் சுகாதார பிரிவின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றது எனவே மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த பயணத்தடை என்பது
மக்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவே எனவே பொதுமக்கள் இந்த பயணத்தடை காலத்திலாவது சுகாதாரப் பிரிவினரின் கட்டுப்பாடுகளுடன் வீடுகளில் இருப்பது மிகவும் சிறந்ததாகும் இன்றைய தினம் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கவென
சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்திருக்கின்றோம் அதாவது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மாகாண பணிப்பாளர் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரிவினர் மற்றும் நமது ராணுவத்தினரின் முயற்சியின் பயனாக
இன்றையதினம் இந்தப் இடைக்கால சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது இந்த சிகிச்சை நிலையத்தில் 200 கட்டில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் பொதுமக்கள் சுகாதார பிரிவினருடன் இணைந்து
கொரோனா தொற்றினை இல்லாதொழிக்க உதவ முன்வரவண்டும் என்றார்.