SuperTopAds

தமிழகத்தில் மதுபான நிலையங்கள் திறப்பு!! -குடிவகைகள் வாங்க குவிந்த குடிமக்கள்-

ஆசிரியர் - Editor II
தமிழகத்தில் மதுபான நிலையங்கள் திறப்பு!! -குடிவகைகள் வாங்க குவிந்த குடிமக்கள்-

தமிழகத்தில் 5 வாரங்களுக்கு பின், நேற்று மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டதால் உற்சாகம் அடைந்த குடிமக்கள் பலர், பொது இடங்களில் அடாவடி செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10 ஆம் திகதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மதுபான விற்பனை நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளது. 

தற்போது கொரோனா பரவல் அதிகம் இல்லாத சென்னை உட்பட, 27 மாவட்டங்களில், நேற்று முதல் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. 

அதன்படி, வைரஸ் பரவல் அதிகமுள்ள கோவை, சேலம் உட்பட, 11 மாவட்டங்களில் 1,650 மதுபான விற்பனை நிலையங்கள் தவிர்த்து, ஏனைய மாவட்டங்களில் உள்ள 3,600ற்க்கும் மேற்பட்ட கடைகள், நேற்று காலை, 10 மணிக்கு திறக்கப்பட்டன.

இதனால் பல கடைகள் முன், காலை 6 மணி முதலே குடிமகன்கள் குவிய ஆரம்பித்தனர். இதனால் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

கூட்டம் அதிகம் இருந்த கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மதுக்கடைகள் மூடப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின் மதுபானத்தை கண்ட ஒருவர், மதுபான போத்தலை வாங்கி, அதை கும்பிட்டு விட்டு, போதையேற்றும் செயல் நடந்தது.

பல இடங்களில் குடிமகன்கள் நடு வீதியில் ரகளை, போக்குவரத்துக்கு இடையூறு, மதுக்கடை வாசலிலேயே அலங்கோலமாக மல்லாந்து கிடந்த செயல்களும் அரங்கேறின.