SuperTopAds

நண்பர்களுடன் உடலுறவு கொள்ள வர்புறுத்திய கணவன்!! -மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு-

ஆசிரியர் - Editor II
நண்பர்களுடன் உடலுறவு கொள்ள வர்புறுத்திய கணவன்!! -மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு-

இந்தியாவில் தேன்நிலவுக்கு அழைத்துச் சென்று நண்பருடன் உடலுறவு கொள்ளுமாறு கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

பெங்களூரு சிவாஜிநகர் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் செரீப் என்பவருக்கு 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. 

திருமணத்திற்கு பின் கோவாவுக்கு மனைவினை சென்று அங்கு வைத்து மது அருந்தும்படி கொடுமைப்படுத்தியுள்ளார். 

கணவரின் கொடுமை குறித்த மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

அந்த முறைப்பாட்டில் தன்னை மது அருந்தும்படி கொடுமைப்படுத்துவதாகவும், சுற்றுலாவுக்கு அழைத்து சென்று அவரது நண்பருடன் உடலுறவு கொள்ளுமாறு தன்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார். 

மேலும் தான் கர்ப்பமாக இருந்த போது கணவர் தாக்கியதால், வயிற்றில் இருந்த கரு கலைந்து விட்டதாகவும் அந்த பெண் முறைப்பாட்டில் கூறியுள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.