உயரை பறித்த செல்பி மோகம்!! -பாலத்தில் இருந்து வீழ்ந்த மாணவி பரிதாப சாவு-
இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற மருத்துவக் கல்லூரி மாணவி மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அம் மாநிலத்தின் இந்தூரில் உள்ள சிலிக்கான் சிட்டி பகுதியை சேர்ந்தவர் 22 வயதான நேஹா அர்சி என்னும் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியே மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி தனது சகோதரனுடன் நேற்று மாலை 7.30 மணியளவில் வீட்டிற்கு அருகே உள்ள மேம்பாலத்தில் நடைபயிற்சி செய்துள்ளார்.
நடைபயிற்சி மேற்கொண்ட பின்னர் மேம்பாலத்தின் சுவர் மீது ஏறி நேஹா அமர்ந்துள்ளார். மேலும் மேம்பாலத்தில் இருந்தவாறு செல்பி எடுக்க நினைத்த நேஹா மேம்பால சுவர் மீது ஏறி நின்றுள்ளார்.
சுவர் மீது ஏறி நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய நேஹா மேம்பாலத்தில் இருந்து கிழே விழுந்தார்.
மேம்பாலத்தில் இருந்து விழுந்த நேஹாவை மீட்ட அயலவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நேஹாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கவனே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.