SuperTopAds

இந்தியாவில் தொடரும் அவலம்!! -4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் தொடரும் அவலம்!! -4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி-

இந்தியாவில் இன்று காலை 6 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 72 நாட்களில் இல்லாத குறைந்த அளவாக புதிதாக 70 ஆயிரத்து 421 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 95 இலட்சத்து 10 ஆயிரத்து 410 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 3,921 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,74,305 ஆக உயர்ந்து உள்ளது. 

மேலும் ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 81 இலட்சத்து 62 ஆயிரத்து 947 ஆக உயர்வடைந்து உள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 9,73,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 48 இலட்சத்து 49 ஆயிரத்து 301 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.