மக்களின் கோபம் தினசரி அதிகரிக்கிறது! ராஜபக்ஸக்களின் ஆட்சி மிக விரைவில் வீழ்ச்சியடையலாம்..
பொதுமக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ராஜபக்ஸக்களின் ஆட்சி மிக விரைவில் முடிவுக்கு வரலாம். என கூறியிருக்கும் மதகுரு முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பொதுமக்கள் தம் எதிர்ப்பை வெளியிடும் நாள் தொலைவில் இல்லை எனவும் கூறியுள்ளார்.
அரசாங்கம் தங்களை அந்த நிலைக்கு தள்ளக்கூடாது என நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாதுளவாவே சோபிததேரர் ஆட்சியிலிருந்தவேளை நாட்டின் அதிகாரத்தை
தனிநபர் ஒருவரின் கரங்களில் கொடுக்கவேண்டாம் அது நாட்டிற்கு பேரழிவை கொண்டுவரும் என தெரிவிப்பார் என நாரஹன்பிட்டிய அபயராம விகாரையின் தலைமை மதகுரு முருதெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இதுவே இன்று இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தனிநபர் ஒருவருக்கு அதிகாரங்களை வழங்கியது தற்போது வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருப்பவர்
அமைச்சர் கம்மன்பிலவை அழைத்து தற்போதைய சூழலில் எரிபொருள்களின் விலையை அதிகரிக்கவேண்டாம் என தெரிவிக்கலாம் அதன் காரணமாகவே அவர் ஜனாதிபதி என அழைக்கப்படுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.