ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி! கோவில்கள், மர நிழல்களில் பாடசாலைகளை நடத்துவது குறித்து பிரதமர் தலமையில் ஆராய்வு..

ஆசிரியர் - Editor I
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி! கோவில்கள், மர நிழல்களில் பாடசாலைகளை நடத்துவது குறித்து பிரதமர் தலமையில் ஆராய்வு..

கோவில்கள், மர நிழல்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக பிரதமர் தலமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதுடன், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் மற்றம் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் போன்ற விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான  கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது மேலும் அங்கு பேசப்பட்டதாவது, பாடசாலைகளை கோயில்களிலும் மர நிழல்களிலும் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.அதேநேரம், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் 

பாடசாலைகளை கட்டங்கட்டமாக மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேவேளை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது தடுப்பூசி வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டால், அதற்கு தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு 

முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வலியுறுத்தினார். மேலும் இந்த திட்டம் வெற்றிபெற வேண்டுமாயின் ஆரம்பக் கட்டமாக 2 இலட்சத்து 70 ஆயிரம் ஆசிரியர்கள் 

மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உட்பட 3 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு