யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி வழங்குவதற்காக தீர்மானிக்கப்பட்ட இடங்கள் குறித்த நிரலில் மாற்றங்கள் செய்யப்பட்டதா? மாகாண சுகாதார பணிப்பாரை கொழும்பு அழைப்பாம்..

யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி வழங்குவதற்காக தீர்மானிக்கப்பட்ட இடங்கள் குறித்த நிரலில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக அரசல்புரசலான பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் மாகாண சுகாதார பணிப்பாளர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை வட்டாரங்கள் கூறுகின்றன.
திருநெல்வேலி பால்ப்பண்ணை கிராமம் தடுப்பூசி வழங்குவதற்காக தீர்மானிக்கப்பட்டதாகவும் பின்னர் அது தீவகத்திற்கு மாற்றப்பட்டதாகவும் குறித்த விடயம் உயர்மட்டத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த விடயத்தை சுகாதார துறையில் உள்ள சிலரே முன்னெடுத்ததாகவும் அந்த விடயம் மாகாண சுகாதாரதுறைக்குள் காரசாரமாக பேசப்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது. இதற்கிடையில் மாகாண சுகாதார பணிப்பாளர் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாகவும்,
தகவல்கள் தொிவிக்கின்றன. இதனால் குறித்த தடுப்பூசி வழங்குவதற்காக தீர்மானிக்கப்பட்ட நிரலில் மாற்றம் இடம்பெற்ற விடயத்தை குறித்து பேசுவதற்கா? என மாகாண சுகாதாரதுறை வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.