யாழ்.மாவட்டத்தில் 111 பேர் உட்பட வடக்கில் 210 பேருக்கு தொற்று! வடக்கில் இதுவரை 8957 பேருக்கு தொற்று, தேசிய கொவிட் தடுப்பு செயற்பாட்டு மையம் தகவல்..
யாழ்.மாவட்டத்தில் 111 பேர் உட்பட வடமாகாணத்தில் 210 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக கொரோனா கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று காலை வெளியிட்டிருக்கும் நாளாந்த நிலவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்.மாவட்டத்தில் 111 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 58 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 26 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 13 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் இதுவரை பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 4,622 ஆக அதிகதரித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் -1253, முல்லைத்தீவு மாவட்டத்தில் – 1194, வவுனியா மாவட்டத்தில் -1169, மன்னார் மாவட்டத்தில் 719 பேருக்கும்
இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.