SuperTopAds

அடுத்த வருடத்திற்குள் உலகில் 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசி!! -வலியுறுத்தும் உலக சுகாதார அமைப்பின் தலைவர்-

ஆசிரியர் - Editor II
அடுத்த வருடத்திற்குள் உலகில் 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசி!! -வலியுறுத்தும் உலக சுகாதார அமைப்பின் தலைவர்-

அடுத்த வருடத்திற்குள் உலகில் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என ஜி7 நாடுகளின் தலைவர்களிடம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் வலியுறுத்தியுள்ளார். 

ஜி-7 அமைப்பின் 47 வது மாநாடு பிரிட்டனில் நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதே நம்முன் உள்ள சவால் என ஜி-7 நாடுகளின் தலைவர்களிடம் கூறியுள்ளேன். அடுத்த ஆண்டு ஜெர்மனியில் ஜி7 நாடுகளின் கூட்டம் நடக்கும் போது உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். இதற்கு 11 பில்லியன் டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்றார்.