யாழ்.மாவட்டத்திற்கு 2ம் கட்ட தடுப்பூசி! அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் 2ம் கட்ட தடுப்பூசி இம்மாத இறுதியில் அனுப்பபடும். என மருந்து உற்பத்தி மற்றும் வழங்கல், ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறியிருக்கின்றார்.
முன்னர் தடுப்பூசி வழங்கப்படாத மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் கிடைக்கும் அதன் பின்னரே முன்னர் தடுப்பூசி வழங்கிய மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
இதுவரை 31 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்துள்ளன என்றார்.