யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம்! நேற்று மட்டும் 139 பேருக்கு கொரோனா தொற்று, பொதுமக்களிடம் மாவட்ட செயலர் விடுத்துள்ள கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம்! நேற்று மட்டும் 139 பேருக்கு கொரோனா தொற்று, பொதுமக்களிடம் மாவட்ட செயலர் விடுத்துள்ள கோரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்கவேண்டும். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று குறைந்த நிலைமை இல்லாது அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது. நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனை முடிவின்படி 

139 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை கிடைத்த பி சி ஆர்,அன்ரியன் பரிசோதனையில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மொத்தமாக 4122 ஆக அதிகரித்துள்ளது.இன்று வரை 53 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

யாழ் மாவட்டத்தில் 5கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன. அதில் ஏற்கனவே தனிமை படுத்தப்பட்ட கிராமங்களில் மூன்று கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

நல்லூர் மற்றும் உடுவில் பிரதேச பிரிவுகளில் இரு கிராம சேவகர் பிரிவுகள் மாத்திரம் தற்பொழுது தனிமைப் படுத்தப்பட்டு காணப்படுகின்றது.

மாவட்டத்தில் 2042 குடும்பங்களைச் சேர்ந்த 5712 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தற்பொழுது சற்று கொரோனா நிலைமை அதிகரித்துச் செல்லும் போக்கு நிலைமை காணப்படுகின்றதே தவிர 

குறைந்ததாக இல்லை. எனவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டியதாக இருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு