கடல்வழியாக இலங்கைக்குள் நுழைந்து 2 மாதங்கள் தலைமறைவாக இருந்தவர் கைது! இராணுவ புலனாய்வு பிரிவினால்..

ஆசிரியர் - Editor I
கடல்வழியாக இலங்கைக்குள் நுழைந்து 2 மாதங்கள் தலைமறைவாக இருந்தவர் கைது! இராணுவ புலனாய்வு பிரிவினால்..

இந்தியாவிலிருந்து கடல்வழியாக இலங்கைக்குள் நுழைந்து 2 மாதங்கள் தலைமறைவாக இருந்த நபர் ஒருவர் இராணுவ புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

முள்ளியவளைப் பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார். 

இந்நபர் கட்டுநாயக்க விமான நிலையமூடாக கடந்த 2009 ஆம் ஆண்டில் சென்னைக்குச் சென்றுள்ளதாகவும் பின் இந்தியாவின் நாகபட்டினத்தில் வசித்து வந்த நிலையில் 

2021 மார்ச் 12ஆம் திகதி கடல் வழியாக சட்ட விரோதமாக இலங்கைக்குள் நுழைந்துள்ளார் எனவும் அவர் கூறினார். 

சுமார் இரண்டரை மாதங்கள் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப் படவுள்ளார்.

Radio