14ம் திகதிக்கு பின்னும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடரும்! அடையாள அட்டை இறுதி இலக்க அடிப்படையிலேயே நடமாட்ட அனுமதி..

ஆசிரியர் - Editor I
14ம் திகதிக்கு பின்னும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடரும்! அடையாள அட்டை இறுதி இலக்க அடிப்படையிலேயே நடமாட்ட அனுமதி..

14ம் திகதி அதிகாலையில் பயணத்தடை நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை தொடரும் என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இது குறித்து இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளதாவது, கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் நீக்கப்படுகின்றபோதிலும் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து தடை தொடரும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாக வைத்தே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் மேலதிக தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 நிலைமையைக் கருத்தில் எடுத்த பின்னரும் சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு