யாழ்.சுன்னாகத்திலிருந்து பொலிஸாருக்கு சாராயம் விற்க ஆறுகால்மடத்திற்கு வந்தவர் கைது! 6 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன்..

யாழ்.ஆறுகால்மடம் பகுதியில் பொலிஸாருக்கு வெளிநாட்டு சாராயம் விற்பனை செய்தவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
சம்பவத்தில் சுன்னாகம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர்.
குறித்த நபரை தொடர்பு கொண்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு வெளிநாட்டு மதுபான போத்தல்கள் தமக்கு தேவை என கூறியிருக்கின்றனர்.
இதனையடுத்து நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மதுபானத்திற்கு விலைபேசி முடித்து ஆறுகால் மடத்திற்கு வந்த நபரை சிவில் உடையிலிருந்த
பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.