SuperTopAds

14ம் திகதி பயணத்தடை தளர்த்தப்படும்போது அமுலில் இருக்கப்போகும் கட்டுப்பாடுகள் என்ன? மதுபானசாலைகள் திறகப்படுமா? இன்று தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
14ம் திகதி பயணத்தடை தளர்த்தப்படும்போது அமுலில் இருக்கப்போகும் கட்டுப்பாடுகள் என்ன? மதுபானசாலைகள் திறகப்படுமா? இன்று தீர்மானம்..

14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணத்தடை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கூறப்படுகின்றது. 

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்குடன், எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணி முதல் எவ்வாறான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது என்பது குறித்து 

இன்றைய தினம் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் தீர்மானிக்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அதேவேளை, மதுபானசாலைகளை தொடர்ந்தும் திறக்காதிருப்பதற்கு தீர்மானிக்க எதிர்பார்த்துள்ளதுடன், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கவும் 

எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்த தீர்மானங்கள் குறித்து இறுதி முடிவு இதுவரை எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இன்றைய தினம் இறுதித் தீர்மானத்தை எட்ட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.