SuperTopAds

காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்குள் புகுந்து திருட்டு! காவலாளி உள்ளிட்ட 7 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்குள் புகுந்து திருட்டு! காவலாளி உள்ளிட்ட 7 பேர் கைது..

மன்னாரில் நிர்மானிக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்குள் புகுந்து மின் இணைப்புக்கு பயன்படுத்தப்படும் கம்பிகள், கேபிள்களை கொள்ளையிட்ட மின் நிலையத்தின் பாதுகாப்பு ஊழியர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளதாவது, அதே பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மின் உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான 

340 மீட்டர் நீளமான கம்பி வடங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இலங்கை மின்சார சபையின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றுவரும் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மானப் பணிகளை 

தனியார் நிறுவனம் ஒன்றே முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.