இந்தியாவில் கொரோனா உச்சம்!! -ஒருநாள் உயிரிழப்பு 6,148 ஆக உயர்வு-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் கொரோனா உச்சம்!! -ஒருநாள் உயிரிழப்பு 6,148 ஆக உயர்வு-

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.  

அதன்படி குறித்த காலப்பகுதியில் அந்நாட்டில் 94 ஆயிரத்து 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 91 இலட்சத்து 83 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்கு உள்ளான 11 இலட்சத்து 67 ஆயிரத்து 952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றிலிருந்து 24 மணிநேரத்தில் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 367 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 76 இலட்சத்து 55 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும் 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 2 ஆயிரத்து 197 பேர் உயிரழ்ந்துள்ளனர். 


Radio