பிரசவத்திற்காக சென்றபோது கோர விபத்து!! -நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பரிதாப பலி-

ஆசிரியர் - Editor II
பிரசவத்திற்காக சென்றபோது கோர விபத்து!! -நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பரிதாப பலி-

இந்தியாவின் கள்ளக்குறிச்சி மாவட்டம் நோயாளர்காவு வண்டி விபத்தில் 23 வயதான நிறைமாத கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாவட்டத்தின் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிறைமாத கர்ப்பிணியான ஜெயலெட்சுமிக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நோயாளர்காவு வண்டி மூலம் ஜெயலெட்சுமி மற்றும் அவரது மாமியார் மற்றும் அவரது நாத்தனார் என மூவரும் கள்ளக்குறிச்சி அரசு வைத்தியசாலைக்கு புறப்பட்டனர்.

வைத்தியசாலை நோக்கி சென்று கொண்டிருந்த போது நோயாளர்காவு வண்டியின் டயர் திடீரென வெடித்ததில் கட்டுப்பட்டை இழந்த நோயாளர்காவு வண்டி வீதியோரம் நின்ற மரத்துடன் மோதியுள்ளது. 

இவ்விபத்துச் சம்பவத்தில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயலெட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மேலும் 4 பேரையும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

இதில் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே ஜெயலெட்சுமியின் மாமியார் செல்வி மற்றும் நாத்தனார் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் நோயாளர்காவு வண்டி சாரதி கலியமூர்த்தி மற்றும் மருத்துவ உதவியாளர் மீனா ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Radio