ஓய்வூதியர்களின் பயணத்திற்காக யாழ்.மாவட்டத்தில் 58 பேருந்துகள் நாளை சேவையில் ஈடுபடும்..

ஆசிரியர் - Editor I
ஓய்வூதியர்களின் பயணத்திற்காக யாழ்.மாவட்டத்தில் 58 பேருந்துகள் நாளை சேவையில் ஈடுபடும்..

யாழ்.மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு போக்குவரத்து வசதியாக நாளை வியாழக்கிழமை இலங்கை போக்குவரத்துச் சபையின் 58 பேருந்துகள் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடவுள்ளது.

குறித்த தகவலை இ.போ.சபையின் வடமாகாண பிரதி பிராந்திய முகாமையாளர் ஆ.குணபாலச்செல்வம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் சூழ்நிலையால் பயணத் தடைகள் அமுலில் உள்ளது.

இந்நிலையில் ஓய்வூதிய கொடுப்பனவை பெறுபவர்களுக்கு வசதியாக பருத்திதுறை சாலையில் இருந்து 20 பேருந்துகளும், யாழ்.சாலையிலிருந்து 38 பேருந்துகளும் சேவையில் ஈடுபடவுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Radio