முதலமைச்சரிடம் பொதுமக்கள் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்!! -புதிய இணையதளம் அங்குரார்பணம்-

ஆசிரியர் - Editor II
முதலமைச்சரிடம் பொதுமக்கள் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்!! -புதிய இணையதளம் அங்குரார்பணம்-

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் நேரடியாக முறைப்பாடு செய்து முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் பெறப்பட்ட முறைப்பாடுகள் மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 

http://cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்யலாம். முறைப்பாடுகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அந்த இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Radio