யாழ்.புன்னாலை கட்டுவனில் காலை கடனுக்கு சென்றவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து பிரதேச செயலர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.புன்னாலை கட்டுவனில் காலை கடனுக்கு சென்றவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து பிரதேச செயலர் விளக்கம்..

யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு - கப்பன்புலம் பகுதியில் மலசலகூடங்களை அமைத்துக் கொடுப்பதற்கு உரிய தரப்பினர் சட்டரீதியாக காணிகளை வழங்க முன்வந்தால் நாங்கள் மலசல கூடங்களை அமைத்துக் கொடுப்பதாக உடுவில் பிரதேச செயலர் எஸ்.முகுந்தன் கூறியுள்ளார். 

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த பகுதியில் காலை கடனை கழிக்கச் சென்ற ஒருவர் மீது பாதுகாப்பு தரப்பினர் தாக்கியதாக வெளி வந்த செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கப்பன்புலம் கிராமத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது. எனினும் குறித்த குடும்பங்கள் வாழ்ந்து வரும் கிராமம் அவர்களின் சொந்த நிலமாக இதுவரை வரையறுக்கப்படவில்லை.

அரச சுற்றுநிருபங்களின் பிரகாரம் நிலப்பரப்பை உறுதிப்படுத்தாத நிலையில் அவர்களுக்கான மலசல கூடங்களை பிரதேச செயலகத்தால் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே குறித்த காணியின் உரிமையாளர்கள் அங்கு வாழும் குடும்பங்களுக்கு 

காணிகளை பகிர்ந்தளிப்பார்களேயானால், பிரதேச செயலகத்தால் மலசல கூடங்களை அமைத்து கொடுக்க தாம் தயாராக இருப்பதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை தமக்கு மலசல கூடம் கட்டித்தரப்படவில்லை எனவும், 

அதனை கட்டிக் கொடுத்தால் தாம் பனங்கூடல்களுக்குள் செல்லும் அவசியம் ஏற்படாதெனவும் அரச அதிகாரிகள் அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு