யாழ்.மாவட்டத்தில் நடமாடும் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவோரை திடீர் சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்த பாவனையாளர் அதிகாரசபை..

யாழ்.மாவட்டத்தில் நடமாடும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களை திடீர் சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையினை பாவனையாளர் அதிகாரசபையினர் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலரின் பணிப்பிற்கமைய, பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் சண்டிலிப்பாய்,
தெல்லிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட நடமாடும் மரக்கறி வியாபாரிகளிடம் விலை தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.இதன்போது விலை காட்சிப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.
மேலும் Online மூலம் வீடுகளுக்கு பொதிசெய்யப்பட்ட பொருட்களை விநியோகிக்கும் வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் விலை தொடர்பான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டது.