வடக்கில் அச்சுறுத்தும் கொரோனா! 2 மாத சிசுவுக்கு கொரோனா தொற்று, ஆடைத் தொழிற்சாலை கொத்தணி தொடர்பில்..
கிளி.கண்டாவளை - தர்மபுரம் கிராமத்தில் 2 மாதமான சிசுவுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தை
கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுபவர் என்றும் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து
அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் குழந்தைக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் குழந்தைக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
தாய்க்கு ஆன்டிஜென் பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்த போதும் அவருக்கு இருக்கும் அறிகுறிகள் தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால்
பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை நேற்றைய தினம் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 14 பேருக்கு
மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.