ரி-20 உலகக் கிண்ண தொடர் இலங்கையில்!! -பேச்சுவார்த்தை ஆரம்பம்-

ஆசிரியர் - Editor II
ரி-20 உலகக் கிண்ண தொடர் இலங்கையில்!! -பேச்சுவார்த்தை ஆரம்பம்-

கொரோனா வைரஸ் தொற்று பரவல் பின்னணியில் ரீ-20 உலகக் கிண்ண தொடரை இலங்கையில் நடத்தும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா 2 ஆவது அலை தீவிரம் காட்டியுள்ள நிலையில் சர்வதேச வீரர்கள் இந்தியாவுக்கு செல்வதற்கு பின்னடிக்கும் நிலை ஏற்படும். இதனால் தொடரை முழுமையாக நடத்த முடியாத நிலை.

இந்நிலையில் மாற்று இடமாக ரி-20 உலகக் கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதற்கிடையில் உலகக்கோப்பைக்கு முன் ஐ.பி.எல் தொடரில் மீதமுள்ள போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

ஐ.பி.எல் இறுதிப் போட்டி மற்றும் ரி-20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது போட்டி ஆகியவற்றிற்கு இடையில் 4 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியை நடத்துவதிலும் சிக்கல் ஏற்படும்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பார்வை இலங்கை மீது திரும்பியுள்ளது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ - இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு