கொரோனா நோயாளிகளுக்கு தலைவாரி, முகச்சவரம் செய்துவிடும் தாதியர்கள்!! -மனித நேயத்திற்கு குவியும் பாராட்டுக்கள்-

ஆசிரியர் - Editor II
கொரோனா நோயாளிகளுக்கு தலைவாரி, முகச்சவரம் செய்துவிடும் தாதியர்கள்!! -மனித நேயத்திற்கு குவியும் பாராட்டுக்கள்-

பிரம்மபூரில் உள்ள மகாராஜா கிருஸ்ண சந்திர கஜபதி மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. 

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கு அங்குள்ள தாதியர்கள் மற்றும் சுகாதர பணியாளர்கள் முகச்சவரம் செய்வது மற்றும் பெண்களுக்கு தலை வாரிவிடுவது போன்ற வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது.

சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதை அடுத்து பல்வேறு தரப்பினரும் செவிலியர்களின் சீர்மிகு சேவையை பாராட்டி வருகின்றனர்.


Radio