யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதியில் 3 மூடைகளில் கஞ்சா மீட்பு!

யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோயில் கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்துப் பணியின்போது
கரையோரத்திற்கு அருகில் 3 சாக்குகளில் 96 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. பருத்தித்துறை கடல் வழியாக கடத்தல்காரர்களால்
குறித்த கஞ்சா பொதிகள் கொண்டுவரப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.