யாழ்.அரியாலை - மாம்பழம் சந்தியில் ஆட்டோவில் மதுபானம் விற்க சென்றவர் கைது, பெருமளவு மதுபானம் மீட்பு..

யாழ்.அரியாலை - மாம்பழம் சந்தியில் ஆட்டோவில் விற்பனைக்காக மதுபானம் எடுத்து சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவு மதுபானம் மீட்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு மதுபான விற்பனை நிலையங்கள்
மதுவரித் திணைக்களத்தின் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ள நிலையில் அரியாலை - மாம்பழம் சந்திக்கு அண்மையில் முச்சக்கர வண்டியொன்றில்
மதுபானத்தை விற்பனைக்காக எடுத்துச் சென்ற ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 300 பியர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதே இடத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் விசாரணையின் பின் சட்ட நடவடிக்கைக்கு ட்படுத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.