யாழ்.நல்லுார் - அரசடி பகுதியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! முடக்கம் தொடர்ந்தும் நீடிக்கும்..

யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட நல்லுார் - அரசடி பகுதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் நேற்றய தினம் குறித்த பகுதியில் உள்ள 156 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசடி பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதி 10ம் நாளில் நேற்றய தினம் 154 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியை தொடர்ந்தும் முடக்க நிலையில் வைத்துக் கொண்டு அப்பகுதி மக்கள் அனைவருக்கும் PCR ரிசோதனைகள் செய்ய வேண்டிய நிலை எழுந்துள்ளது .முடக்கநிலையை உசாதீனப்படுத்தாமல்
சமூகப் பொறுப்புடன் செயற்படுவதே இக்காலத்திற்கு ஏற்ற செயற்பாடு ஆகும்