SuperTopAds

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன்!! -வீட்டின் முன் நூதனப் போராட்டம் நடத்திய காதலி-

ஆசிரியர் - Editor II
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன்!! -வீட்டின் முன் நூதனப் போராட்டம் நடத்திய காதலி-

மத்தியப்பிரதேசத்தில் காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் வீட்டின் முன் பேண்ட் வாத்தியக் குழுவுடன் சென்ற காதலி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

கொரக்பூரைச் சேர்ந்த, சந்தீப் மவுர்யா என்பவருக்கும் இவரது அத்தை மகளுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். அதனால் இருவரும் உடல் ரீதியாக நெருங்கி பழகியுள்ளனர்.

பின்னர் மவுரியாவுக்கு இராணுவத்தில் வேலை கிடைத்தவுடன் அத்தை பெண்ணை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்தது மட்டுமின்றி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கவும் முயற்சித்துள்ளனர். 

இதனை அறிந்த காதலி குடும்பத்தினர் மற்றும் பேண்ட் வாத்தியக் குழுவுடன் காதலன் வீட்டிற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விடயம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.