SuperTopAds

தடுப்பூசிகள் போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது!! -புதிய ஆய்வு நடத்திய எய்ம்ஸ் தகவல்-

ஆசிரியர் - Editor II
தடுப்பூசிகள் போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது!! -புதிய ஆய்வு நடத்திய எய்ம்ஸ் தகவல்-

தடுப்பூசி செலுத்திய பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மரணமும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். அந்த ஆய்வு தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஆய்வில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் உட்படுத்தப்பட்டனர். 

தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனையின் போது வைரஸ் அளவு அதிகமாகவும் காய்ச்சலும் இருந்தது. காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை இருந்தது. தடுப்பூசி போடாமல் கொரோனா பாதித்தவர்களைப் போன்றே இது இருந்தது.

பாதிப்படைந்தோர் உடலில் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தாலும், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மற்ற நோயாளிகளைப்போலவே வைத்தியசாலையில் சேர்க்கும் நிலை ஏற்பட்டாலும் யாருக்கும் மரணம் நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.