கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு நாளில் இரு கொரோனா மரணங்கள் பதிவு..! 67 வயதான பெண், 46 வயதான ஆண்..
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள தகவல்கள் தொிவிக்கின்றன.
கண்டாவளை மற்றும் கரைச்சி சுகாதார பிரிவுகளிலேயே குறித்த இரு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உயிரிழந்த பெண் கண்ணகிபுரம், புன்னை நீராவி என்ற முகவரியைச் சேர்ந்த 67 வயதுடைய நல்லதம்பி சிவபாக்கியம் என்றும்
அவருடைய அயல் வீட்டில் வசிக்கும் ஒருவர் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதாகவும்
சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டவர் D5, பெரிய பரந்தன் என்ற முகவரியைச் சேர்ந்த
46 வயதுடைய K.சிறீகாந்தன் என்றும் தெரியவந்துள்ளது.