SuperTopAds

கொரோனா தொற்றுக்குள்ளான மனைவியை குறியலறையில் அடைத்து வைத்த கணவன்!!

ஆசிரியர் - Editor II
கொரோனா தொற்றுக்குள்ளான மனைவியை குறியலறையில் அடைத்து வைத்த கணவன்!!

தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் லட்செட்டிபெட்டா என்ற பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மனைவியை அவரது கணவர் வீட்டுக்கு வெளியே உள்ள குளியலறையில் 5 நாட்களாக தங்கவைத்துள்ளார். 

குறித்த பகுதியைச் சேர்ந்த பெத்தய்யா - நரசம்மா தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் நரசம்மாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவரை வீட்டுக்குள் வரக்கூடாது எனக் கூறி வெளியே உள்ள சிறிய அளவிலான குளியலறையில் தங்கவைத்த கணவர், அவருக்கு போதிய உணவைக் கூட வழங்காமலும் கழிவறைக்குச் செல்லக் கூட வீட்டுக்குள் அனுமதிக்காமலும் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது.

நரசம்மா படும் அவதியைப் பார்த்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிஸார் போலீசார், கணவருக்கு கொரோனா குறித்து மனநல ஆலோசனை வழங்கி, நரசம்மாவை வீட்டில் உள்ள தனியறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.