யாழ்.மாவட்டத்தில் 3508 தொற்றாளர்கள், 48 கொரோனா மரணங்கள் இதுவரை பதிவு..! மாவட்ட செயலர் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 3508 தொற்றாளர்கள், 48 கொரோனா மரணங்கள் இதுவரை பதிவு..! மாவட்ட செயலர் அதிர்ச்சி தகவல்..

யாழ்.மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தின் பின்னர் சுமார் 3508 கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், 48 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

2 ஆயிரத்து 908 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து778 நபர்கள் சுயதனிமைப்படுத்தல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தனிமைப்படுத்தப்பட்டப்பட்டிருந்த தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் அந்தோனிபுரம், மயிலிட்டி ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் 

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் ஒரு கிராம அலுவலகர் பிரிவும் விடுவிக்கப்பட்டுள்ளன. உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஜே189, ஜே 190ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு சில பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன 

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு அரசினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. தடுப்பூசி வழங்கலைப் பொறுத்தவரை முதற் கட்டமாக வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் தடுப்பூசிகளின்

49 ஆயிரத்து 439 தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்பட்டு முடிவுறுத்தப் படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசி மருந்துகள் இன்றைய தினம் காலையில் இருந்து 

4 வைத்தியசாலைகளில் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு